மாவட்ட செயலாளர் தலைமையில் தேசிய மீலாத் விழா இன்று இரத்தினபுரியில்.!

Date:

2024 ஆம் ஆண்டின் தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் மகிந்த வீரசூரிய, பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடத்திய மீலாத் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அத்துடன் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நினைவு முத்திரையும் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.

இம்முறை தேசிய மீலாத் விழாவில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் கயனி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...

Crown Green and the Future of Multi-Player Features: Fast Facts

Crown Green and the Future of Multi-Player Features: Fast...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

Why Crown Green Leads in Casino Trends

Why Crown Green Leads in Casino Trends The casino industry...