இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாட்டில் 19வது வருடாந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 8ஆம் திகதி வளவ்வத்தை ஜமாஅத்தே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாமின் முக்கிய நோக்கம், இரத்த தேவைமிக்க நோயாளிகளுக்கான உதவியை வழங்குவது மட்டுமல்லாது, சமூகத்தில் மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் செயல்பாடாகும்.
சமூக ஆர்வலர்கள்,மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களது அடையாள ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.