மினுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது.
இச் சந்தையில் மாணவர்கள் தமது கைத்தறி முறைப் பொருட்கள், இனிய உணவுப் பதார்த்தங்கள், மற்றும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருட்களை அசத்தலாகக் காட்சிப்படுத்தினர்.
சிறுவர்களின் சொந்த முயற்சியில் உருவான இவை, அவர்களின் ஆற்றல், திறமை, மற்றும் புதுமையான சிந்தனைகளுக்கு சான்றாக இருந்தன.
இச்சந்தையில் பெற்றோர்களும் கிராம மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், மாணவர்களின் முயற்சிகளை பாராட்டினர்.
சந்தையின் சிறப்பு, தோற்றத் தூய்மையிலும் விற்பனைப் புதுமையிலும் வெளிப்பட்டது. குறுகிய நேரத்தில் கைத்தறிப் பொருட்கள் விற்பனையானதுடன், மாணவர்களின் விற்பனைத் திறமையும் புகழப்பட்டது.
“மாணவர்களின் சமூக வாழ்க்கை விழிப்புணர்ச்சிக்கு இச்சந்தை உறுதுணையாக இருக்கும்,” என பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
(ஏ. சி பௌசுல் அலிம்)