மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

Date:

திருகோணமலையில் இருந்து மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு இன்று (21) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருகோணமலைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணலைக்கு கொண்டுசெல்லப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20)   திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது தமது நாட்டில் வாழ முடியாத காரணத்தால் தமது நிலபுலங்களை விற்று, தஞ்சம் கோரி இலங்கைக்கு படகில் வந்ததாகவும் அந்த அகதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் உள்நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களை கூட்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 பேரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனையோரை முகாமில் தங்கவைக்குமாறும் நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (20) இரவு தங்கவைக்கப்பட்டிருந்த 104 மியன்மார் பிரஜைகளும் இன்று (21) காலை 7.30 மணிக்குப் பின்னர் பொலிஸாரினால் 2 பஸ்களில் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த பயணிகள் அடங்கிய பஸ்கள் இடைநடுவே சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து, பின்னர், பகல் வேளையில் திருகோணமலைக்கு அகதிகள் மீள அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த மியன்மார் பிரஜைகளை மிரிஹானை முகாமில் தங்கவைப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காததன் காரணமாக அவர்கள் மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், திணைக்களத்தின் அனுமதி கிடைத்ததும் எதிர்வரும் திங்கட்கிழமை  குறித்த முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த மியன்மார் பிரஜைகளை யு.என்.எச்.ஆர் பிரதிநிதிகள் பார்வையிட்டதுடன் அவர்களிடமிருந்து தகவல்களையும் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய தேவைகளை அரச திணைக்களங்களும் தொண்டர் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகானது வெள்ளிக்கிழமை (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

படகில் வந்தடைந்த மியன்மார் அகதிகளில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

மூலம்: வீரகேசரி

 

 

 

 

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...