தனது சொந்த மக்களில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்ற டமஸ்கஸின் கசாப்புக்கடைகாரன் என்று வர்ணிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஆதரவுடைய சிரிய சுதந்திர இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கிடைக்கப் பெறும் அறிக்கைகளின்படி அரச படைகளுக்கு எதிரான தாக்குதலின் போது இந்த குழுவிற்கு அமெரிக்கா இராணுவ ஆதரவை வழங்கியுள்ளது.
சிரியாவின் அரச படைகளுக்கும் ஆட்சிக்கு எதிரான குழுக்களுக்கும் இடையே நவம்பர் 27 அன்று அலெப்போ நகரின் மேற்குப்புற கிராமப் புறங்களில் மோதல்கள் வெடித்தன. நவம்பர் 30ஆம் திகதிக்குள் எதிர்ப்புப் படைகள் அலெப்போவின் நகர மையத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றி இட்லிப் மாகாணம் முழுவதும் ஆதிக்கத்தை நிலைநாட்டின.
அரசாங்கப் படைகளும் பணியாளர்களும் தங்கள் நிலைகளிலிருந்து பின்வாங்கி, கிளர்ச்சியாளர்கள் சுமுகமாக அந்த இடங்ளை கைப்பற்ற அனுமதித்தனர்.
மிக மோசமான செட்னயா சிறைச்சாலை மற்றும் பிற இடங்களில் உள்ள பாதுகாப்பு சிறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை எதிர்க்கட்சி விடுவித்தது.
சிரியா பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி தான் தனது வீட்டில் இருப்பதாகவும் ஆட்சியின் தொடர்ச்சியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறினார்.
நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்து வாழ்ந்த சிரியர்கள் லெபனான் மற்றும் ஜோர்டானிய எல்லைகளுக்கு விரைந்து வந்து தாயகம் திரும்பி அங்கு தம்மை பிரிந்து வாழும் தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்க முயன்றனர்.
அனைத்து அரசு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை அல்-அசாத்தின் பிரதமரின் மேற்பார்வையின் கீழ்தொடர்ந்து இருக்கும் என்று சிரிய சுதந்திர இராணுவத்தின் தளபதி அபு முகமது அல்-ஜெலானி அறிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் “நமது புரட்சி மற்றும் நமது மக்களின் சிறந்த பிம்பத்தை முன்வைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும்” என்று அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாலும், அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் பொது மக்களுக்கு உரிமையான சொத்துக்களான பொது நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தும் என்பதாலும் வானை நோக்கி வேட்டுக்களை தீர்ப்பதற்கும் அவர் கண்டிப்பாக தடை விதித்தார்.
மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்த உதவுவதும் நமது கடமையாகும் என்று அவர் கூறினார். எந்தவொரு தனியார் சொத்தையும் எந்த வடிவத்திலும் ஆக்கிரமிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சிரியாவில் சுமார் 12 சதவீதமாக இருந்த சிறுபான்மை ஷீஆ பிரிவினரால் ஆளப்பட்டு வந்த பெரும்பான்மை சுன்னி பிரிவினர் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை கோரி மே 2011 இல் அரபு கிளர்ச்சியின் போது வெகுண்டு எழுந்தனர். அதற்கு பதிலாக அவர்களுக்குக் கிடைத்தது மரணம், அழிவு, முன்னெப்போதும் இல்லாத துன்பம் மற்றும் துயரம் மட்டுமே.
அவர்களின் நகரங்கள், மற்றும் கிராமங்கள் குண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.
சுமார் 250 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சொத்துக்களின் இழப்புக்களுடன் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது.
நவீன உள்கட்டமைப்புகள் நாசமாக்கப்ட்டன. வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. சமூகம் சிதறடிக்கப்பட்டது. பாதுகாப்பைத் தேடி மக்கள் பல்வேறு கோணங்களில் இடம்பெயர்ந்ததால் குடும்பங்கள் சிதைந்தன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ரஷ்யா என்பன சிரியா மற்றும் மத்திய கிழக்கை அழிக்கும் தங்கள் நீண்டகால தீய வடிவமைப்பை செயல்படுத்த சிரியா மக்களின் எழுச்சியை பயன்படுத்தியதன் மூலம் இந்த துயர நிலை ஏற்படுத்தப்பட்டது.
சிரிய சர்வாதிகாரி பஷர் அல் அசாத்தை ஈரான், ரஷ்யா மற்றும் சீனா என்பன ஆதரித்தன. அதே நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்பனவற்றின் ஏமாற்றும் மற்றும் மோசடி கொள்கை சிரியாவை அழித்து, ஊனமுற்ற பஷர் அல் அசாத் அங்கு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை உறுதி செய்வதாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டதாகவும், சவுதி அரேபியாவால் நிதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படும் ஐ. எஸ். ஐ. எல்.ஐ அழிக்க குண்டுவீசுகிறோம் என்ற போர்வையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக சிரியா மீது குண்டுகளை வீசின.
முதலாவதாக அமெரிக்க முன்னாள்அதிபர் பராக் ஒபாமா காய்கறி சந்தைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை கண்ட இடத்தில் எல்லாம் குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக சிரிய மக்களைக் கொன்றார்.
பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் சிரிய மக்களை படுகொலை செய்தார். அதைத் தொடர்ந்து நவம்பர் 2015 இல் அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சிரியாவில் குண்டுவீசி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றார்.
செப்டம்பர் 2015 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பங்கிற்கு கொடூரமான வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு சிரியர்களை வாட்டி வதைக்க தொடங்கினார்.
இந்த தாக்குதல்களை அடிப்படையாக வைத்து கடந்த பல தசாப்தங்களில் மிக மோசமான போர்க்குற்றங்களில் சிலவற்றில் ரஷ்யா குற்றவாளி என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியது.
2014பெப்ரவரி 22ல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 2139 ஐ மீறி ரஷ்யாவும் சிரியாவும் கொத்தணி ஆயுதங்களை விரிவாகப் பயன்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சில அறிக்கைகளின்படி, ரஷ்யா அல்-ரக்கா மற்றும் இட்லிபில் உள்ள சில இலக்குகள் மீது வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தான் அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு சக்திகளும் சிரிய மக்கள் மீது கொடூரமான குற்றங்களைச் செய்ய மிகவும் அதிநவீன மற்றும் மிகவும் அழிவுகரமான வித்த்தில் தமது விமான சக்தியைப் பயன்படுத்தின.
சிரியா என்ற பாரம்பரிய பண்டைய தேசம் இவ்வாறு தான் போட்டியிடும் கிளர்ச்சிக் குழுக்கள், பயங்கரவாதக் கூறுகள், சர்வதேச சக்திகள் மற்றும் மதப் பிரிவுகளின் படுகுழியாக சிதைக்கப்பட்டது.
சிரியாவின் உள்நாட்டுப் போர் நம் காலத்தின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியாகும். நாட்டின் போருக்கு முந்தைய மக்கள்தொகையில் பாதி பேர்-11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்-கொல்லப்பட்டனர் அல்லது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் எழுத்தாளர் சாம்ஸ் ஜெரான்ஸ் இப்போது சிரியாவை அழிப்பதே திட்டம் என்ற தலைப்பில் எழுதியுள்ள குறிப்பில் நான் விஷயங்களை எளிமைப்படுத்தப் போகிறேன்.
இது ஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம். இது ஜோர்ஜ் புஷ் ஜூனியரின் கீழ் அதிகாரத்தில் இருந்தவர்கள் அல்லது அதற்கு நெருக்கமான நவீன மரபுவாத போர் வெறியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணம்.
அமெரிக்கா தாக்க விரும்பிய நாடுகள் என்று பட்டியலிட்ட நாடுகளில் வட கொரியா, ஈராக், ஈரான், லிபியா மற்றும் சிரியா என்பன அடங்கும் என்றுதெரிவித்துள்ளார்.
neo.org என்ற பத்திரிக்கை தளம் பின்வருமாறு கூறுகிறது. “2003 ஈராக்கில் நடத்திய சட்டவிரோதப் போருக்கு முன்னரே, அதேபோல் 2011 லிபியாவில் நடத்திய சட்டவிரோதப் போருக்கும் முன்னரே,அதேபோல் சிரியாவில் மேற்கொண்ட மறைமுகப் போருக்கும் முன்பே அனைவரும் அமெரிக்காவின் எதிரிகளாக சுட்டிக் காட்டப்பட்டனர்”.
ஓய்வுபெற்ற அமெரிக்க. ஜெனரல் வெஸ்லி கிளார்க் 2007 இல் இட்ட ஒரு பதிவில் ஈராக், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஈரானை அழிக்க அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
சிரிய இராணுவம் ஈரானின் குத்ஸ் படையிலிருந்து கணிசமான ஆதரவைப் பெறுகிறது என்று நம்பப்படுகிறது. போர்க்களத்தில் சிரிய அரசாங்க படைகளுக்கு ஈரானிய இராணுவம் ஆற்றல் மிக்க வகையில் பொறுப்பாக இருந்தது என்று ஜூன் 2015 இல் சில அறிக்கைகள் தெரிவித்திருந்தன.
2015 நவம்பர் 23ல் தெஹ்ரானில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் ஈரானிய தலைவர் அலி கமேனிக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு, சிரிய தலைமை தொடர்பான தனது நிலைப்பாட்டை ரஷ்யாவுடன் ஒன்றிணைக்க ஈரான் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
சிரியாவின் அழிவில் இருந்து சிறந்த பயன்களை அனுபவிக்கும் தரப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான இந்த யூத-கிறிஸ்தவ சிலுவைப் போரின் சிற்பியான இஸ்ரேல் காணப்படுகின்றது.
ஆரம்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கவும் இதே அசாத்தை தான் பயன்படுத்தின. இதன் மூலம் இஸ்ரேலுக்கு இருந்த இரசாயன ஆயுத அச்சுறுத்தலை அவை அகற்றின.
மத்திய கிழக்கை மேலும் சிறிய கூறுகளாகப் பிரிப்பதற்கான அவர்களின் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதே இறுதி வடிவமைப்பாகும்.
காசாவில் தற்போது நடைபெற்று வரும் இனப்படுகொலைகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா ஆகியவை ஆதரவளிப்பதும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.
முஸ்லிம்கள் தொடர்ந்தும் பின் தங்கியவர்களாகவும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய தலைமையிலான ஐரோப்பிய சதித்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலே இதுவாகும்.
சிரியாவில் சிந்தப்பட்ட இரத்தத்தில் ஈரான் மற்றும் சவுதி அரேபியாவும் தங்கள் பங்கைக் கொண்டுள்ளன. அசாத்தை தூக்கியெறிந்து சவூதி சார்பு ஆட்சியை சிரியாவில் நிறுவும் நோக்கில் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு சவுதி நிதியளித்தது.
அசாத்தின் காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்க ரஷ்யாவுடன் ஈரான் இணைந்தது. அசாத்தின் ஆட்சியால் அந்த அப்பாவி மக்கள் எதிர்நோக்கிய பாதிப்புக்களையும் துயரங்களையும் நன்கு அறிந்திருந்தும் கூட அவரின் ஆட்சியை உறுதி செய்வதற்காக ஈரான் ரஷ்யாவுடன் கைகோர்த்த்து.
உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய போர்க்களமாகவும், ஷியா – சுன்னி பிரிவினைவாதத்தை உருவாக்கும் இயங்கு தளமாகவும் சிரியா மாறியது. அல்லது மாற்றப்பட்டது. இவ்வாறு ஈரான் மற்றும் ஆகிய இரண்டு நாடுகளும் மத்திய கிழக்கின் எதிர்கால எல்லைகளின் விஸ்தரிப்புக்கும் மற்றும் பயங்கரவாதத்தின் பரவலுக்கும் ஆழமான தாக்கங்களுடன், சிரியாவின் அழிவுக்கு பங்களித்தன.
சிரியர மக்கள் தமதுசொந்த நாட்டுக்குள் உயிர்வாழவோ அல்லது அண்டை நாடுகளில் ஒரு புதிய வீட்டை உருவாக்கவோ கூட முடியாமல் சிரமப்பட்டனர்.
ஐரோப்பாவில் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு மத்தியதரைக் கடலைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் அதை உயிருடன் கடக்கவும் முடியவில்லை.
எல்லைளை கடந்து செல்லும் பயணங்கள் எவ்வளவு அபாயம் மிக்கவையோ அதேபோல் அல்லது அதைவிட ஆபத்தானதாக உள் நாட்டில் தங்கியிருப்பதும் மாறியது.
துப்பாக்கி ஏந்தியவர்களால் சுடப்படுவதையோ அல்லது ஆட்சிக்காக போராட இளைஞர்களைக் கடத்திச் செல்லும் நபர்களிடம் இருந்து தப்பிக்கவும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாதுகாக்க பல குடும்பங்கள் பல இரவுகள் முழுவதும் பல மைல்கள் நடந்து செல்ற வன்னம் காலத்தை கழித்தனர்.
இந்த இருண்ட சூழ்நிலையில் தான் பஷர் அல் அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
சிரியாவில் ஏற்பட்ட நிலைமைகளை ஒரு “ஆபத்தான வளர்ச்சி” என்று அடையாளப்படுத்தி விவரித்தே, கத்தார், சவூதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, ஈராக், ஈரான், துருக்கி மற்றும் ரஷ்யாவில் உள்ள சர்வாதிகாரிகள் அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுத்தனர் ஆனால் அது பயன் இல்லாமல் போய்விட்டது.