முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் மறியலில்..!

Date:

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதியதில் நேற்று (6) விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் லொஹான் ரத்வத்த மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.

அதன்படி, மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 05ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...