முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் படகு: அரசாங்கத்தினார். மீட்பு நடவடிக்கைகள்!

Date:

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த கப்பலொன்று நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில், குறித்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்று காலை திருகோணமலை துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு, குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டதாகவும், அதன் பின்னர் அப்படகில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  மருத்துவ பரிசோதனைகளுக்காக  அப்படகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். இதன்பின்னர்  திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு  நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர் எனவும் அவர்களில்  சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

விசாரணையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக 110நபர்கள் மூன்று படகுகளில் தமது நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அதன்போது கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இரு படகுகள் விபத்திற்குள்ளானதாகவும் குறித்த அனர்த்தத்தில் சிறுவர்கள் உட்பட 6 நபர்கள் மரணமடைந்துள்ளதாகவும்,  எஞ்சிய அனைவரும் குறித்த படகில் ஏறி உயிர்தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...