அரபு மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய அறிவைப் பெறுவது உங்கள் எதிர்காலத்தை வெற்றிகரமாக்க உதவும்.
அரசியல் அறிவியல், குற்றவியல் நீதி, வணிகம், கல்வி, பத்திரிகைத்துறை, சட்டம், மொழியியல், சமூக நலப் பணி, மத ஆய்வுகள், ஆப்பிரிக்க ஆய்வுகள், ஒப்பீட்டு இலக்கியம் போன்ற பலவற்றை கற்பவர்களுக்கும் அரபு மொழி அறிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அரபு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள், ஊடகம், வர்த்தகம், கல்வி, பொருளாதாரம், வங்கி, மொழிபெயர்ப்பு, வெளிநாட்டு சேவை, உளவுத்துறை உட்பட்ட பல துறைகளிலும் வேலை வாய்ப்புப் பெறலாம்.
உதாரணமாக, நீங்கள் அமெரிக்காவில் உள்ள FBLI நிறுவனத்துடன் இணைய விரும்பினால், அரபு மொழி அறிவு உங்களுக்கு விசேட நன்மை பயக்கும். ஏனெனில் அந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் அரபு மொழி தெரிந்தவர்கள் ஒரு சதவீதமே தற்போது உள்ளனர்.
சர்வதேச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறுதல்
மேலும், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, USAID போன்ற சர்வதேச அமைப்புகளில் அரபு மொழி மற்றும் அரபு கலாச்சாரம் தெரிந்தவர்களுக்கு நல்ல மவுசு உள்ளது.
வர்த்தக வாய்ப்புகள்
வர்த்தகத்தைப் பொறுத்தவரை, அரபு மொழி பேசும் நாடுகள் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளாக மாறி வருகின்றன, மேலும் அரபு உலகத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் முயற்சிகள் மூலம் பல புதிய வணிக வாய்ப்புகள் உருவாக்கலாம். அரபு நாடுகளின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருவதால், அரபு உலகம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையை உருவாக்கி வருகின்றது.
புலமைப்பரிசில் மற்றும் மாணியங்கள்
அரபு மொழியை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக அமெரிக்கா நியமித்துள்ளது. எனவே, அரபு மொழியைக் கற்றுக்கொள்வதன் பொருளாதார நன்மைகள் நீங்கள் நினைப்பதை விட மிக அதிகமாகும்.
தேசிய மூலோபாய மொழி முன்னெடுப்புக்கள் மூலம் பல புலமைப்பரிசில்கள் மற்றும் கற்றல் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், அரபு உள்ளிட்ட ஏனைய மொழிகளைக் கற்பது இதற்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஆரம்ப கல்வி முதல் மேல்படிப்புகள் மற்றும் வெளிநாட்டில் கல்வி கற்பதன் செலவுகளையும இது ஈடு செய்யும். தீவிர அறிவுறுத்தல் வாய்ப்புகள், ஆசிரியர் பரிமாற்றம் மற்றும் தொழில்முறை மேம்பாடு போன்ற பல கந்கைகளுக்கும் இது துணை புரியும்.
இது தொடர்பாக புலமைப்பரிசில்கள் மற்றும் மானியங்களில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
■ கட்டார் பல்கலைக்கழகம்
■ முக்கிய மொழி புலமைப்பரிசில்
■ வெளிநாட்டு அரபு நிகழ்ச்சிகள்
■ பரோன் விருதுகள்
■ மொழி பென்ஜமின் ஏ. கில்மன் சர்வதேச புலமைப்பரிசில் கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதல் அரபு மொழியை அறிவது உங்களுக்கு பொருளாதார ரீதியாக பயன்தருவது மட்டுமல்லாமல், கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலைப் பெறவும் உதவும்.
மேற்கத்திய உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பெல்லி டான்ஸ், ஆயிரத்தில் ஓர் இரவுகள் கதைகள், மற்றும் மத்திய கிழக்கு உணவுகளான ஹம்முஸ் மற்றும் ஃபலாஃபில் போன்றவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் இவை அரேபிய வாழ்க்கை முறையைப் பற்றிய வரையறுக்கப்பட்ட ஒரு அறிவையே தரும்.
நீங்கள் அரபு உலகத்தை ஆராயும்போது, மரியாதை, கண்ணியம் மற்றும் விருந்தோம்பல் உட்பட, அம்மக்களுக்கு தனித்துவமான பெருமானங்கள் மற்றும் கலாச்சாரத்தைப் போற்ற நீங்கள் தூண்டப்படுவீர்கள்.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான அரபு-அமெரிக்கர்களைப் பற்றிய சிறந்த புரிதலைப் பெறவும் இது உதவும்.
கலாச்சார விழிப்புணர்வு
உலகின் தற்போதைய முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 1.5 பில்லியன் ஆகும். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது எந்த மொழியைப் பேசினாலும், மத நோக்கங்களுக்காக அரபு மொழியை குறைந்தபட்சம் வாசிக்கவேனும் கற்பது அவர்களுக்குக் கட்டாயமாகும். இந்நிலையில் அரபு மொழியில் உள்ள குர்ஆனை ஓத முடியாத ஒரு முஸ்லிமையும் நீங்கள் உலகில் காண முடியாது.
எனவே, அரபு மொழியை அறிந்துகொள்வது உங்களை அரேபியர்களுடன் மட்டுமல்ல, உலகில் வாழும் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த முஸ்லிம்களுடனும் நெருக்கமாக்கும்.
ஏனைய அரசியல் கலாச்சார மற்றும் மதப் பெருமானங்களைப் பற்றிய புரிதலைப் பெறுதல்
அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களை மையமாகக் கொண்ட சமீபத்திய எதிர்மறையான புவிசார் அரசியல் நிகழ்வுகள் பற்றிய –பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட- செய்திகள் காரணமாக, ஊடகங்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஒருதலைப்பட்சமாக அரபு மற்றும் முஸ்லிம் கலாச்சாரத்தை எதிர்மறையான கோணத்தில் சித்தரிப்பதைக் காணலாம்.
இவை அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துள்ளன.
அத்துடன் அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒத்துழைப்பு அல்லது கலந்துரையாடலுக்கு உகந்தவர்கள் அல்ல என்ற எண்ணமும் உருவாகி வருகின்றது, இந்நிலையில் அரபு மொழியைக் கற்றுக்கொள்வதானது அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களின் கலாச்சார, அரசியல் மற்றும் மத விழுமியங்களைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெற உதவும்.
நீங்கள் அவ்வாறு பெறும் அறிவைக் கொண்டு, நாடுகளுக்கிடையேயான கலாச்சார மற்றும் மொழியியல் இடைவெளியைக் குறைக்கவும், அத்துடன் கலாச்சார மோதல்களைத் தீர்க்கவும், தடுக்கவும் துணைபுரியும்.
அரபு மொழியின் அடிப்படை அறிவைக் கொண்டு நீங்கள் அரபு கலாச்சாரத்தைப் பற்றிய துல்லியமான மற்றும் நேர்மறையான புரிதலைப் பெற்று அதை பிறருக்கும் தெளிவு படுத்த முடியும்.
உலக நாகரிகத்தின் மீது அரேபிய மக்கள் மற்றும் அரபு மொழியின் தாக்கத்தை அறியதல்
அழகான மற்றும் வளமான அரபு மொழியானது அரபு உலகிற்கு மாத்திரம் மட்டுப்பட்டதல்ல, உங்கள் அன்றாட வாழ்வில் அரபு மொழியின் தாக்கத்தை நீங்கள் அடிக்கடி காணலாம்: உதாரணமாக, அல்ஜீப்ரா என்பது உலகில் உள்ள அனைவரும் அறிந்த மற்றும் கற்றுக் கொள்ளும் ஒறு கணித முறையாகும்.
ஆனால் இதை மத்திய யுகத்தில் வாழ்ந்த அரேபிய கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும், காபி, பருத்தி, எலுமிச்சை மற்றும் மல்லிகை போன்ற அன்றாட பொருட்களும் முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் அரேபியர்களே ஆவர்.
மருதாணி, மேக்ரேம், வீணை, மெத்தை, ஜெர்பில், சர்பட், சஃபாரி போன்ற அரபு மூலங்களைக் கொண்ட சொற்கள் நம் அகராதிகளில் கூட காணப்படுகின்றன.
இது தவிர, பாரசீகம், துருக்கியம், குர்திஷ ஸ்பெய்ன், சுவாஹிலி, உருது, டிக்ரின்யா உள்ளிட்ட பல மொழிகளை அரபு மொழியால் தாக்கம் பெற்ற மொழிகளாகக் குறிப்பிடலாம்.