முதன்முறையாக கைவினைப் பொருள் உற்பத்திகளுக்கான சர்வதேச ‘சவூதி வாரத்தில்’ பிரகாசித்த இலங்கையின் கைவினைப் பொருட்கள்!

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 2024 நவம்பர் 23 – 29ம் திகதி வரை இடம்பெற்ற கைவினைப் பொருள் உற்பத்திகளுக்கான சர்வதேச சவூதி வாரம் “பனான் – 2024” நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த நான்கு கைவினைப்பொருள் உற்பத்திக் கம்பெனிகளும் வரலாற்றில் முதல் தடவையாகப் பங்கேற்றன.

இந்தப் பங்கேற்புக்கான ஏற்பாடானது புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சின் ஒத்துழைப்புடன் ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வெற்றிகரமான ஏற்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

ரியாத் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற இக்கண்காட்சி வாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைக்கான அலகினை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து கைவினைக் கலைஞர்களுடன் தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்துரைத்த தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள்,

இலங்கையில் கைவினைப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகள் (SMEs) இத்தகைய சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பதானது உலகளாவிய பங்கேற்பாளர்களுக்கும் குறிப்பாக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பாரிய நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சவூதி அரேபியாவிலுள்ள பங்கேற்பாளர்களுக்கும் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்குமான மிகச்சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் கருத்துரைத்து தூதுவர்,

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாலும், ஆரம்ப நிலை நிறுவனங்களாலும் அறிமுகப்படுத்தப்படுகின்ற புதிய தயாரிப்புகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல் திட்டம் மற்றும் இலங்கையின் கைவினைப்பொருள் உற்பத்தி போன்றனவற்றின் வளர்ச்சிக்கு உதவலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சவூதியில் இடம்பெறும் சவூதி சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி வாரம் “பனான்” – 2024 நிகழ்வானது வருடந்தோறும் சவூதி அரேபியாவின் கலாச்சார அமைச்சருடைய கண்காணிப்பின் கீழ் இயங்குகின்ற சவூதி பாரம்பரிய ஆணையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வின் போது சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சித் திறப்பு விழாவிற்குத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்ற சவூதி பாரம்பரிய ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஜாசிர் அல்ஹர்பிஸ் அவர்கள் தூதுவர் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.

கைவினைப் பொருள் உற்பத்திகளுக்கான சர்வதேச சவூதி வாரம் “பனான் – 2024” நிகழ்வில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றுக்கொண்ட இலங்கையைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்களாக Warna Batik, Paritho Leather Crafting, Natural Fiber products and Handicrafts and Sumaguna Products என்பன காணப்பட்டன.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...