தேசிய ஷூரா சபையின் உயர்மட்டக் குழுவொன்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை நேற்று (06) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியது.
இச்சந்திப்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் பளீல், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், தேசிய ஷூரா சபையின் முன்னாள் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரான் நாட்டின் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்,சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஸூர், சபையின் உப தலைவரும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவருமான சட்டத்தரணி ஜாவித் யூஸுப் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று மற்றும் வழிநடாத்தற் குழு உறுப்பினர் இக்ராம் அவர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பிற்கான ஏற்பாட்டை பிரதியமைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.