வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடந்த சர்வதேச தொண்டாற்றும் நோக்கிலான (Charity Bazaar) பஸாரில், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம் பங்கேற்றது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டார்.
சவூதி தூதரகத்தின் கடைத் தொகுதி (Stall) , அந்நாட்டின் பாரம்பரிய தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இது பார்வையாளர்களின் மிகுந்த கவனத்தை ஈர்த்ததுடன், பலரின் பாராட்டையும் பெற்றது.
இந்த பஸார், பல நாட்டுத் தூதரகங்கள் இணைந்து தொண்டாற்றும் பணிகளை முன்னேற்றுவதற்காக நடத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையும் சர்வதேச நட்புறவையும் வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.