இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்பு சபையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபாவை முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியிலிருந்து (MCF) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை இன்று (12) முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் வைத்து கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜனாப். ரிஸான் ஹுசைன் அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹ்மத், வக்பு பிரிவு பொறுப்பாளர் ஜனாப். ஏ.எஸ்.எம். ஜாவித், வக்பு நியாய சபை செயலாளர் (பதில்) எம்.என்.எம். ரோஸன், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம். முனீர், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் . எம்.ஐ.எம். மஸீன், மற்றும் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் ரிஸான் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.