புதிதாக நியமிக்கப்பட்ட அரச ஹஜ் குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் தனது கடிதத்தினை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து இன்று (31) பெற்றுக்கொண்டார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பிரிவின் சுற்றுலா முகாமைத்துவத்தில் பேராசிரியாக இவர் கடமையாற்றுகின்றார்.
ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார், ஏனைய உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி, பௌசுல் ஹக் ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை அண்மையில் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.