ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 3 பேர் பலி!

Date:

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப்  பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ் விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்  டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...