இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடும் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக முக்கிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் காயத்தால் வெளியேறியுள்ளார். ஹேஸல்வுட் திடீரென காயமடைந்ததால், அவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம், ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுத் தளம் தற்பொழுது பாதிக்கப்படியுள்ளது. இந்நிலையில், இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முன்னிலை பெறுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜோஷ் ஹேஸல்வுட்டின் காயம் எந்த அளவிற்கு தீவிரம் என்பதை அடுத்த கட்ட அறிக்கைகள் மூலம் தெரியவர உள்ளது.