கிறிஸ்மஸ் தினத்தன்று நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

Date:

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த பொலிஸ்  நிலையங்களில் உள்ள உள்ள சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், உதவி காவல்துறை கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...