இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுகல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷைக் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி முதுமாணி கலாநிதி பட்டங்களை மிக சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ரியாதிலுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவருக்கான பாராட்டும் கௌரவமும் ரியாத் நகரிலுள்ள அல்மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
கபூரியா அரபுக்கல்லூரியில் அதிபராக இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த மறைந்த அஷ்ஷெயக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களின் மருமகனான ரிஸ்மி அவர்களுக்கான இப்பாராட்டு விழாவில் காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் பணிப்பாளரும் அல் இஸ்ஹான் நலன்புரி அமைப்பின் தலைவருமான அஷ்ஷைக் பத்ஹுர்ரஹ்மான் பஹ்ஜி அவர்கள் உட்பட இலங்கையிலுள்ள பல்வேறு சமூக நல அமைப்பின் பிரமுகர்கள் உலமாக்களும் கலந்துகொணடு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.
காலியிலுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அரபு மற்றும் ஷரியா மாணவர்களை உருவாக்குவதோடு குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்களையும் உருவாக்கி வருகிறது.
இக்கல்லூரியின் மாணவர்கள் இஸ்லாமிய உயர்கல்விதுறையில் பல அரபுநாடுகளில் உயர் பல்கைலக்கழகங்களில் கற்று முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ள கல்விமான்களை உருவாக்குவதில் பங்களிப்புகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




