இலங்கையின் கலைத்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் 39ஆவது வருடாந்த “கலாபூஷண அரச விருது விழா” அண்மையில் அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம். அக்ரம் அவர்கள், “கலாபூஷண” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் தனது அதிபர் பதவிக்காலத்தில் எட்டியாந்தோட்டை கராகொடை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி குருவிட சாஹிரா முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் சிறந்த கல்விசேவையாற்றி, சமூகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
கலைத்துறை மட்டுமல்லாது கல்வித் துறையிலும் அவரது சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.