நீதி அமைச்சரின் கலாநிதிப் பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம்

Date:

நாடாளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டது தொடர்பில்  இலங்கை நாடாளுமன்றம் விளக்கமளித்துள்ளது.

குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றம் இதனை தெரிவித்துள்ளது.

அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய தகவல் பத்திரத்தில் கலாநிதி என்ற பட்டம் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் படி, மேற்படி தவறினை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு இலங்கை நாடாளுமன்றம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

மேலும், மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்க, நாடாளுமன்றம் தற்போது அனைத்து எம்.பி.க்களின் தகவல்களை இணையதளத்தில் மீண்டும் சரிபார்த்து புதுப்பித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...