டித்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில், இன்று (27) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார்.
இதனையடுத்து, சபாநாயகர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.