பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால
பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் தமது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதைத் தடைசெய்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்களை நிராகரித்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறான எவ்விதச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும், பொதுமக்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளுடன் பொலிஸ் நிலையங்களுக்குள் தடையின்றிச் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகளை வழங்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமைச்சர் விளக்கமளித்தார்.
அத்தகைய சந்தர்ப்பங்களைத் தவிர, பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு வேறு எவ்விதத் தடையும் இல்லை என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.