பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகமாக கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களின் தரத்தைப் பாதுகாக்க, ஒரு சிறப்பு வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்ததாவது:
1750 பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழு, இந்த சோதனைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சோதனைகள் டிசம்பர் 1 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இந்த நடவடிக்கைகள், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்றன.