பாடசாலை மாணவர்களுக்கான மானியத் திட்டம்: கல்வி அமைச்சின் அறிவித்தல்

Date:

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத, ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் பணி எதிர்வரும் நாட்களில் துரிதமாக மேற்கொள்ளப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பாதிக்கப்படக்கூடிய பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்க, 2025 ஆம் ஆண்டு முதல் அவர்களின் கல்விக்கான உதவித்தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...