ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நளீம் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், மொஹமட் சாலி நளீம் குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.
இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.