இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார்.
பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை அநுரவை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் மகாபோதி கோயில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் குறிக்கும் வகையில், புத்த கயாவில் உள்ள ஒரு பழங்கால புத்த கோவில் இதுவாகும்.