பேரீச்சம்பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மென்பானம்: சவூதியின் மிலாஃப் கோலா’

Date:

‘மிலாஃப் கோலா’ எனும் பெயரில் உலகின் முதலாவது பேரீச்சம்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கோலாவினை சவூதி அரேபியா உற்பத்தி செய்துள்ளது.

இது பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒன்றிணைப்பதுடன் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதைப் போன்று உலக சந்தையில் இயற்கையான ஆரோக்கிய மென்பானத்திற்கான இடைவெளியையும் பூர்த்தி செய்துள்ளது.

சவூதி அரேபியாவில் கரும்பு சர்க்கரை, சிரப் போன்ற பாரம்பரிய இனிப்புகளுக்கு பதிலாக பேரிச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட புதிய கோலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிலாஃப் கோலா என்று பெயரிடப்பட்ட இந்த பானத்தை ‘ரியாத் பேரீச்சம்பழ’ கண்காட்சியில் அல்-மதீனாவின் தலைமை நிர்வாக அதிகாரி பந்தர் அல்-கஹ்தானி மற்றும் சவுதி விவசாய அமைச்சர் அப்துல்ரஹ்மான் அல்-ஃபாட்லி ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.

பேரீச்சம்பழம் மத்திய கிழக்கில் ஒரு முக்கிய பழமாகும், நார்ச்சத்து, மற்றும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன.

வழக்கமான சோடாக்களைப் போலன்றி, மிலாஃப் கோலாவில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை.  மிலாஃப் கோலாவின் அறிமுகமானது சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்,  இது நாட்டின் தொலைநோக்கு பார்வை 2030-க்கு இணங்க உள்நாட்டின் நிலையான தயாரிப்புகளை ஊக்குவிப்பதாகும்.

குளிர்பானமானது சர்வதேச உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை வலியுறுத்தி, உள்நாட்டில் கிடைக்கும் பேரீச்சம்பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த...

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல்...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை...

சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த...