பொலிஸ் ஊடகப் பேச்சாளராக புத்திக மனதுங்க: பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம்

Date:

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனதுங்க கந்தளாய் பிரிவில் இருந்து இப்பதவிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சை பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.யு.கே. லொக்குஹெட்டி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ. இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணை பிரிவிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.கே.எஸ். பெரேரா பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார, புத்தளம் பிரிவில் இருந்து வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அமைய இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...