முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீனின் தாயார் காலமானார்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும். லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களுக்கான முன்னாள் முகாமைத்துவ ஆசிரியரும், உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் என் எம் அமீன் அவர்களின் தாயார் ஹாஜியானி மர்யம் பீபீ காலமானார்.

ஆயுர்வேத வைத்தியர் மர்ஹூம் நிஸாமுடீன் உடையாரின் மனைவியான ஹாஜியானி மர்யம் பீபீ மரணிக்கும் போது 92 வயதாகும்.

அன்னாரின் ஜனாஸா அரநாயக்க, தல்கஸ்பிட்டியவிலுள்ள 104ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (08) ஞாயிற்றுக்கிழமை லுஹர் (நண்பகல்) தொழுகையைத் தொடர்ந்து அரநாயக்க, தல்கஸ்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...