“தூய இலங்கைக்காக” என்ற மகுடம் தாங்கி இயங்கி வரும் பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ‘நியூஸ் நவ்’ இணையத்தளத்துக்கு 6 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு, கடந்த 14ம் திகதி கொழும்பில் உள்ள ‘நியூஸ்நவ்’ காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் செய்யித் சாலிம் ரிபாயி மௌலானா தலைமையில் நடைபெற்றது.
ஜனநாயக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்,மஞ்சுள கஜநாயக்க ,சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ். எல்.யூசுப்,ருஹுனு பல்கலைக்கழக சிங்கள மொழிக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க, மற்றும் கௌரவ அதிதிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
தலைவர் செய்யித் சாலிம் மௌலானாவின் வரவேற்புரையைத் தொடர்ந்து 6 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் கலந்துகொண்ட “தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க:
“தூய இலங்கையை கட்டியெழுப்பும் ஊடகப்பணியில் ஈடுபட்டு வரும் நியூஸ் நவ் ” ஊடகம் ,அதன் பணிகள் மற்றும் சிறப்புக்கள் பற்றியும் , நாட்டின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்திற்கான நியூஸ் நவ் மீடியாவின் சமூகப் பணிகள் குறித்தும் பாராட்டினார்.
தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கருத்து வழங்கும் போது, “நிவ்ஸ்நவ்”பக்கசார்பற்ற ஒரு ஊடகம். வார்த்தைகளுக்கு மட்டுமின்றி செயலிலும் நிரூபித்த ஊடகமாக நியூஸ் நவ்வை தான் அடையாளம் காண்பதாக கூறினார்.
அதன் பின்னர் சிரேஷ்ட விரிவுரையாளர், தம்மிக்க ஜயசிங்க மற்றும் ஃபிர்தௌஸ் மௌலவி ஆகியோரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இறுதியாக பஹன மீடியா பிரைவேட் லிமிடெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷைக் அப்துல் முஜீப் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.