இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை; மனைவிக்கு 7 வருட சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இது.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கு, இம்ரான் கானும் அவரது மனைவியும் சட்டவிரோதமாக பஹ்ரியா டவுன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பல பில்லியன் கணக்கான ரூபாய் மற்றும் நிலத்தை சட்டவிரோதமாகப் பெற்று,, அதற்கு ஈடாக இங்கிலாந்து அரசால் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 50 பில்லியன் பவுண்டுகளை சட்டப்பூர்வமாக்கியதாக குற்றம்சாட்டப்படுவது தொடர்புடையதாகும்.

என்.ஏ.பி, டிசம்பர் 2023 இல் இம்ரான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

190 மில்லியன் பவுண்டு அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடியாலா சிறையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இன்று தீர்ப்பை அறிவித்தார்.

மேலும், இம்ரான் கானுக்கு 1 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மற்றும் புஷ்ரா பீபிக்கு அரை பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தண்டனை பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் மாதமே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு, இம்ரான் கான் – புஷ்ரா பீபி தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே புஷ்ரா பீபி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து, இம்ரான் கான் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கனவே காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது,​​அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் சூறையாடினர். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.

மேலும், தோஷகானா எனப்படும் அரசு கருவூல ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியையும் இழந்தார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த வருடத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்தார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு வந்த பரிசுகளை விற்றது, அரசு ரகசியங்களை கசியவிட்டது, சட்டவிரோத திருமணம் தொடர்பான் வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டது. மேலும், இம்ரான் கானுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...