இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி

Date:

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் SLRM இலங்கைக்கான செயல் தலைவர் ஷொல்போன் மெம்பெடோவா (Cholpon Mambetova), நீர் மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர் (SG-WUD) ஸ்ரீனிவாஸ் சம்பத், சிரேஷ்ட நகர அபிவிருத்தி நிபுணர்/செயல் தலைவர் எல்மா மோர்ஷெடா (Elma Morsheda) சிரேஷ்ட திட்ட அதிகாரி (SG-WUD) ) பாஞ்சாலி எல்லேபொல, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி. ஏ.டி.தமயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...