உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிய அமெரிக்கா: பதவியேற்ற 8 மணிநேரத்தில் ட்ரம்ப் கையெழுத்து; காரணம் என்ன?

Date:

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப் முதல் நாளிலேயே அதிரடி காட்டும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில் என்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை குறிக்கும் வகையில், தனது முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலான நிர்வாக உத்தரவுகளை ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

சுமார் 200 கோப்புகளில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் முக்கியமாக உலக சுகாதார மையத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள டொனால்டு டிரம்ப் அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உட்பட பல்வேறு சுகாதார நெருக்கடிகளை உலக சுகாதார நிறுவனம் சரியாக கையாளவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா தொற்றின் போது, உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் நோயைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு விரைவாக செயல்படவில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட WHO உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்று நோய்கள், மனிதாபிமான நெருக்கடிகள், புற்றுநோய், இதய நோய்கள் போன்ற நீண்டகால சுகாதார நிலைமைகள் ஆகியவற்றில் உலக சுகாதார மையம் கவனம் செலுத்துகிறது.

இந்நிலையில் உலக சுகாதார மைய அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.

  1. தெற்கு எல்லையை வலுப்படுத்துதல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த நபர்களை வெளியேற்றுதல், திருநங்கைகளை பெண்கள் பட்டியலில் இருந்து நீக்குதல், அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பல முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் போன்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
  2. மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றப்படும்.
  3. பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி திட்டம் வகுக்கப்படும்.
  4. வீட்டில் இருந்து பணி புரியும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். மறுக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
  5. அமெரிக்காவில் போதைப்பொருள் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். இவற்றை விற்பனை செய்பவர்கள் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்படுவார்கள்.
  6. பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க திட்டம் வகுக்கப்படும். விரைவில் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும்.
  7. முன்னர் சொன்னது போல பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டு வரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை.
  8. சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சீன பொருட்கள் மீது 60% மெக்சிகன் தயாரிப்புகள் மீது 25% வரிகளை முன்மொழிந்தார். இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
  9. அரசின் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும், அமெரிக்க மக்களுக்கு பேச்சு சுதந்திரம் மீண்டும் கொண்டு வரப்படும்.
  10. வெளிப்புற வருவாய் சேவையை கொண்டு வருவோம். இதன் மூலம் மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். இது அமெரிக்க மக்களின் நலனுக்காக செய்யப்படும். இதன் மூலம் அரசிற்கு கூடுதல் பணம் கிடைக்கும்.
  11. அனைத்து மக்களும் மின்சார வாகனம்  வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தகர்த்தப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான எந்த ஒரு காரையும் வாங்கி கொள்ளலாம்.
  12. யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விகிதத்தில் அமெரிக்கா ஆட்டோமொபைல் துறை அதிக உற்பத்திகளை செய்யும்.
  13. எரிசக்தி செலவைக் குறைக்கவும், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவும் தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
  14. உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க முடியும்.
  15. மேலும் அமெரிக்காவிற்கும் இது பலனளிக்கும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...