தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முழப்பருக்கும் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவி அதிகாரிகளுக்கும் இடையேயான சந்திப்பொன்று நேற்று (27) நீதி அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்தப்பில், உத்தியோகத்தர்களின் கடமைகளை வெளிப்படைத்தன்மையுடனும் திறமையுடனும், ஒருங்கிணைப்புடன் எவ்வாறு பேணுதல்,மற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இருந்த அரசாங்கங்களினால் அமைச்சுக்களை அரச நிறுவனங்களை அவ்வப்போது அமைச்சகங்களுக்கு கையளித்தல், மீண்டும் கையகப்படுத்துதல், அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் போன்ற மோசமான நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இதனால் தரமான சேவைகளை வழங்க முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் தங்கள் கடமைப் பட்டியலில் கவனம் செலுத்துமாறும், அமைச்சரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இங்கு விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க, அரசக் கொள்கையில் நீண்டகால மாற்றம் தேவை என்றும், அதற்காக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் செயலாளர் (தேசிய ஒருங்கிணைப்பு) கே. மகேசன், இயக்குநர் (தேசிய ஒருங்கிணைப்பு) ஏ.எஸ்.பி. வீரசூரிய மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஊக்குவிப்பு உதவி அதிகாரி உட்பட மூத்த அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.