கண்டி பாத்த ஹேவா ஹெட்ட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Date:

கண்டி மாவட்டத்தின் பாத்த ஹேவா ஹெட்ட பிரதேச பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணப் பொதி ARI நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் உடுதெனிய ஹாஷா ரிசப்ஷன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (01) வழங்கி வைக்கப்பட்டது.

ARI நிறுவனத்தின் நிறைவேற்று முகாமையாளர்  ரிக்கா.ஸ் மரிக்கார் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில்  கண்டி கல்வி வலய காரியாலயத்தின்  ஜெமீல் ஐயா , திருமதி. தீபா விஜயசிங்க, எலன் ஐயா , இலங்கை வங்கியின் (BOC) மாரஸ்ஸன கிளை முகாமையாளர் திருமதி. நுவாந்தி , திருமதி. நிஹாரா ஆசிரியர்,  நிலாப்தீன்(திருமதி. சல்மா ஆசிரியரின் கணவர் ) அவர்களும்,  சாஜன் மஹிந்த அமரவீர அவர்களும், OM Traders உரிமையாளர் ராஸிக் (சமாதான நீதவான்) அவர்களும், ஜாமிஉல் அல்ஹர் ஜூம்மா மஸ்ஜித் நிர்வாகி தலைவர் அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்களும், முன்னாள் நிர்வாக தலைவரான அப்ஸால் கிரீன்டின் மில் உரிமையாளர் அல்ஹாஜ் மஸூத் மரிக்கார் , பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் ஆகிர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் தெல்தொட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி அதிபர்  அஸ்லம் , அல்-அக்பர் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர்  நஸ்மின், மாரஸ்ஸன தமிழ் வித்தியாலய அதிபர் பாலகுமார் , பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

ARI நிறுவனத்தின் உரிமையாளர்  ரிக்காஸ் மரிக்கார் தனது வரவேற்புரையில்,
நிறுவனத்தின் ஊடாக பல பாடசாலைக்களுக்கு கணினி வழங்கிய விடயத்தையும் தெல்தோட்டை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் பல்கலைக்கழகம் சென்றுள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டம், பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட பல விடயங்களையும் பற்றி பேசினார்.

உடுதெனிய ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்மா மஸ்ஜிதின் பிரதம இமாம் அல் ஹாபீஸ் மௌலவி ரிபாஸ் அவர்கள் விஷேட தூஆ பிரார்த்தனையாற்றினார்.

எதிர்காலத்திலும் ARI நிறுவனத்தின் கல்வி சம்பந்தமான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைபெறும் என அதன் முகாமையாளர் குறிப்பிட்டார். திருமதி சாந்தனியின் நன்றியுரையுடன் வைபவம் இனிதே நிறைவுற்றது.

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

Crown Green and the Future of Multi-Player Features: Fast Facts

Crown Green and the Future of Multi-Player Features: Fast...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

Why Crown Green Leads in Casino Trends

Why Crown Green Leads in Casino Trends The casino industry...

2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2026ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார...