கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு

Date:

1446 ஹிஜ்ரி ஆண்டுக்கான புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு (27) திங்கட்கிழமை இரவு கொழும்பு – 10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில்  இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு -10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு முஸ்லிம் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான என். நிலூபர், அலா அஹமட், கணக்காளர் முஹம்மட் நிப்ராஸ் உட்பட திணைக்கள அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முப்தி, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஏ.சீ.எம். பர்ஸாத் உட்பட உலமாக்கள், அரச உயர் அதிகாரிகள், கொழும்பு பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பள்ளிவாசல் குழு உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (பௌசி) மிஹ்ராஜ் இரவின் முக்கியத்துவத்தைப் பற்றி பயான் நடாத்தினார்.

அத்தோடு, விசேட சிறப்பு பிரார்த்தனையை (துஆ) மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் பிரதம இமாம் காரி அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ்
நவவி நிகழ்த்தினார்.

கொழும்பு-10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் தலைவர் மௌலவி ஏ.சீ.எம். பர்ஸாத் நிகழ்வில் நன்றியுரை நிகழ்த்தினார்.

புனித மிஃராஜ் தின இரவு நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

 

 

 

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...