சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Date:

சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர  தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை மறுதினம் (08) புதன்கிழமை முதல் 12 ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது 3,23,739 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

எவ்வாறாயினும் பரீட்சைக்கு முன்னர், பகுதி 01 இல் காணப்பட்ட 03 வினாக்கள் வெளியானதையடுத்து பாரிய சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பெறுபேறுகளை வெளியிட நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் சர்ச்சைக்குள்ளான முன்று வினாக்களுக்கும் சகல பரீட்சாத்திகளுக்கும் புள்ளிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

 

 

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...