சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!

Date:

சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா கண்டறிந்து 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை மக்கள் மெல்ல மெல்ல மறக்க தொடங்கியிருக்கும் சூழலில், சீனாவில் இருந்து மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

human metapneumovirus (ஹெச்.எம்.பி.வி) மனித மெடப்னியுமோவைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்துள்ளது.

அதேபோல தகன கூடங்களிலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாம். மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.

புதிதாக பரவும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் மட்டும் இன்றி இன்புளுயன்ஸ்சா ஏ, மைகோபிளாஸ்மா நிமோனியா, கொரோனா ஆகியவையும் பரவி வருவதக சில நெட்டிசன் கள் கூறுகிறார்கள்.

புதிய வைகை வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் அவசரசிலை பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

HMPV வைரஸ் என்பது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை காட்டும். அதாவது கிட்டத்தட்ட கொரோனாவுக்கு என்ன அறிகுறிகள் இருந்ததோ அதே அறிகுறிதான் இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கும் காட்டுகிறதாம்.

இந்த வைரஸ் நோய் பரவலை சீன சுகாரத்துறை அதிகரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக SARS-CoV-2 (Covid-19)என்ற எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

” சீனா பல வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இன்புளுயன்சா ஏ, ஹெச்.எம்.பி.வி, மைகோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் 19 ஆகிய வைரஸ் பாதிப்புகள் உள்ளன.

இதனால், மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிமோனியா பாதிப்பு அதிகரிப்பால் குழந்தைகள் மருத்துவமனையில் குறிப்பாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: oneindia

 

 

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...