ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கையை ஆதரித்து கொழும்பில் ஒன்றுகூடிய தாய்மார்கள்!

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கைக்கு இலங்கையின் தாய்மார்கள் அமைப்பான அன்னையர் முன்னணி (Mothers Movement) அமைப்பு ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்றையதினம் (23) கூடிய இந்த அமைப்பானது, அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்க்கை சார்பு பிரசாரத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, அவரது முடிவானது, நாடுகளை அழிவுகரமான LGBTQ நிகழ்ச்சி நிரலில் இருந்து பாதுகாக்கிறது எனக் கூறியது.

இலங்கையில் சிதைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டங்களை சட்டப்பூர்வமாக்குவதை சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை அன்னையர் முன்னணி இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் தர்ஷனீ லஹந்தபு குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளிப்பதற்கான கோரிக்கை மனு ஒன்றை அவர்கள் அமெரிக்க தூதரகத்திடம் இதன்போது கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் ஹிரந்த குணதிலக

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...