துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ விபத்து; பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி

Date:

வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 10ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மற்றும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மர கூரைகளை கொண்ட 12 மாடி ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலை உச்சியில் அமைந்துள்ள கிரான்ட் கார்ட்டெல் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது, நள்ளிரவில் உணவகம் அமைந்துள்ள பகுதியில் மூண்ட தீ வேகமாக பரவியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து விருந்தினர்களை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாகவும் மேலும் அந்த ஓட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்ததாகவும்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் , 234 பேர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Popular

More like this
Related

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள்...