துருக்கியை சோகத்தில் ஆழ்த்திய தீ விபத்து: 76 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

Date:

துருக்கி நாட்டில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 76  ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தீ விபத்து பயத்தில் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க துருக்கி நாட்டின் போலு மாகாணம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் பகுதியாக உள்ளது.

அந்த மாகாணத்தின் கர்தல்காயா பகுதியில், தி கிராண்ட் தர்தால் ஸ்கை ரிசார்ட் என்ற சொகுசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குதான் இந்த கொடூர
தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது துருக்கியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருக்கின்றனர். கிராண்ட் கார்தால் சொகுசு விடுதியில் ஏராளமான மக்கள் விடுமுறை காரணமாக தங்கள் குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி 21ஆம்  திகதிஅந்த நட்சத்திர ஹோட்டலில் சமையலறையில் அதிகாலை 3:30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவிய தீ மற்ற அறைகளுக்கும் பரவியுள்ளது.

தொடர்ந்து காற்று வேகமாக வீசத் தொடங்கிய நிலையில் 12 மாடி கட்டிடத்தில் முழுமையாக தீ பரவியது. ஆனால் விடுதியில் இருந்த தீ விபத்து அலாரம் செயல்படவில்லை என கூறப்படுகிறது. தீ முழுமையாக பரவிய பிறகு கடும் புகை காரணமாக அங்கிருந்தவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டதே தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து தீ மற்றும் கடும் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட தொடங்கினர்.

12 மாடி கட்டிடத்தில் 230க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அச்சம் காரணமாக பலர் ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளனர், சிலர் பெட் ஷீட்டுகளை பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழே இறங்க முயற்சித்துள்ளனர்.

இதற்கிடையே மூச்சு திணறல் மற்றும் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியான நிலையில், தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கும் சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்த்துள்ளது. பயம் காரணமாக ஜன்னல் வழியாக கீழே குதித்ததில் இருவர் உயிரிழந்த சோக சம்பவமும் நேரிட்டது.

கடுமையான புகை காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 51 பேர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலருக்கும் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வரை அருகில் உள்ள விடுதிகளுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள விடுதிகள் தங்கி இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தேசத்திற்கு மிக வலி மிகுந்த தருணம் இது என துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சரான அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...