நாளை ஆரம்பமாகும் ஹமாஸ் இஸ்ரேலுக்குகிடையிலான யுத்த நிறுத்தத்தின் பின் இஸ்ரேல் தன்வசம் உள்ள 2000 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யப்படுவார்கள்.
இவர்களில் 250 பேர் ஆயுட்கால சிறை வழங்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள். 500 பேர் கடுமையான தீர்ப்புக்களால் கைதான பலஸ்தீனிய கைதிகள்.
இதைத்தவிர ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 1000 கைதிகள் என்ற அடிப்படையில் மொத்தம் 2000 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும்.
இதற்கு நிகராக ஹமாஸ் தம்மிடம் இருக்கின்ற 33 பேரை விடுதலை செய்யும். இவர்களில் மனிதாபிமான ரீதியாக விடுவிக்கப்பட வேண்டியவர்களில் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் அடங்குகின்றார்கள்.