புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்: பிரதமர்

Date:

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, எமக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதற்கு, ஆனால் இதற்குக் காரணம், புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடியால் நீதிமன்ற உத்தரவின் காரணமாக வினாத்தாள்கள் மதிப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.

வெகு விரைவில் பெறுபேறுகளை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று...

இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.

ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ்...

ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடன் ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி...