முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன உள்ளிட்ட நால்வருக்குப் பிணை

Date:

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ஹர்ஷன கெக்குனாவல உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (23) ஆஜர்படுத்தப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபா பணத்தை தேர்தல் பிரசாரங்களுக்கு தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (22)  கைது செய்யப்பட்டிருந்தனர்.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...