ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

Date:

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை (9) முன்னெடுக்கப்பட்டது.

கையில் பதாதைகளை தாங்கியவாறு  அமைதியான முறையில் குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள்,மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோஹிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்துள்ளனர்.

 

Popular

More like this
Related

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு: சாய்ந்தமருதில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட செயலமர்வு!

இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து...

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...