பாராளுமன்றத்தில் நாளை தைப்பொங்கல் விழா..!

Date:

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தைப்பொங்கல் விழா  நாளை ஜனவரி 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

சபாநாயகர் தலைமையில்  அமைச்சர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற தமிழ் இந்து அலுவலர்கள் சார்பில்  விஸ்வலிங்கம் முரளிதாஸ் இணைந்து புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு / இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரனையுடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  அனுருத்தனன் ஆகியோரின் அனுசரனையில் தைப்பொங்கல் நிகழ்வு  நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் மூலம் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்படும். இதேவேளை, தைப்பொங்கல் மூலம் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்து மரபுகளை கௌரவிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிகழ்வின் வாயிலாக விவசாய துறையின் வளர்ச்சிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் புதிய திசை கோடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

Popular

More like this
Related

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று...

இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.

ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ்...

ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடன் ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி...