ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள்!

Date:

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்

இதன்போது மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாக போராட முடியும் என கூறி, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிய மன்று தடைகோரிய மனுவை நிராகரித்திருந்தது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று நடைபெற்று வருகிறது.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...