ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை: இஸ்ரேல் பிரதமர்

Date:

ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த சில மணி நேரங்களில் நெதன்யாகு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்த ஒரு அறிக்கையில் நெதன்யாகு, தற்போது ஒப்பந்தம் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் இறுதி விவரங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே முறையான பதிலை வெளியிடுவேன் என்று கூறினார்.

இதனிடையே, பலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை உறுதி செய்வதில் அந்த விவரங்கள் மையமாக உள்ளன என்று பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த பெயர் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எந்தவொரு ஒப்பந்தமும் நெதன்யாகுவின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விபரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹான்களை ஒலிக்கச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...