அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது என ட்ரம்ப் பதவிப் பிரமாண நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் முதல் அமெரிக்கா பிரகாசிக்கும் எனவும், உலக நாடுகளில் அமெரிக்காவின் மரியாதை உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொஷிங்டனில் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டடத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வெளிநாட்டு தலைவர்கள், இராஜதந்திரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதானிகள், செல்வந்தர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ட்ரம்ப் உரையாற்றும் போது,
- அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது, அமெரிக்கர்களின் பாதுகாப்பு. மீட்டெடுக்கப்படும்.
- இது வரை இல்லாத வலுவான அமெரிக்காவை கட்டமைப்பேன். இந்த நாளில் நம்நாடு செழித்து உலகம் முழுமைக்கு மதிக்கப்படும்.
- பைடனால்ட எல்லைப் பாதுகாப்பு பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இயற்கை பேரிடர்களை பைடன்அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
- அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்.
- மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும்
- பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம்.
- இனி மின்சார வாகனங்கள் என்பது கட்டாயமல்ல..
- உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்கா உருவெடுக்கும்
- எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது.
- அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார்.