அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள காட்டுத்தீ தெற்கு கலிபோர்னியாவை கபளீகரம் செய்து வருகிறது.
மூன்றாவது நாளாக அங்கே காட்டுத்தீ பரவிக்கொண்டு இருக்கிறது. அங்கே மொத்தமாக 5 விதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பாலிசேட்ஸ், ஈடன், ஹர்ஸ்ட், லிடியா மற்றும் சன்செட் ஃபயர்ஸ் ஆகிய காட்டு தீ அங்கே ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தீ நாசமாக்கி உள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன. 5 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
அங்கேதான் தற்போது காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கே இருந்த பிரபலங்கள் வீடுகள் எல்லாம் நாசமாகிவிட்டதால் அவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.
அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகம் ஏற்படும் பகுதிகளில் கலிபோர்னியா மாகாணம் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த ஒரு வருடம் மட்டுமே கலிபோர்னியாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட காட்டுத் தீக்கள் ஏற்பட்டது. ஒரே மாதத்தில் கலிபோர்னியாவில் இங்கே 2-3 முறை தீ ஏற்படுவது வழக்கம்.
இந்த முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ கைப்பற்றிவிட்டது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி உள்ளது.
மேலும், இந்த காட்டுத்தீ காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் இருக்கிறது. அங்குச் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வசிக்கும் கலாபாசாஸ் மற்றும் சாண்டா மோனிகா பகுதிகளிலும் காட்டுத்தீ மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்கள், இசை பிரபலங்கள் எனப் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.
குறிப்பாக இதில் ஹாலிவுட் பிரபலங்கள் வாழும் பகுதி தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பேட்மேன் புகழ் பென் அஃப்லெக், பில்லி கிரிஸ்டல், ஜான் குட்மேன், கேரி எல்வெஸ், மாண்டி மூர், பாரிஸ் ஹில்டன் என்று பலரும் இந்த காட்டுத்தீயால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.