இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Date:

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...